fbpx

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!! நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார் பாவேந்தன்..!! தவிக்கும் சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து பாவேந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான், இன்று ராணுப்பேட்டைக்கு செல்லவுள்ள நிலையில், பாவேந்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெரியாரையும், பிரபாகரனையும் எதிரெதிராக நிற்க வைப்பது பாஜக – சங் பரிவார்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

நேற்றைய தினம் (பிப். 24) நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் விலகினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவதால், சீமான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Read More : தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு..!! வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி சோதனை..? சென்னையில் பரபரப்பு..!!

English Summary

Pavendhan has announced his resignation from the post of Ranipet District Secretary of the Naam Tamilar Party.

Chella

Next Post

சீரான சிவில் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு திருமணப் பதிவு கட்டாயம்..!! - அரசு அதிரடி

Tue Feb 25 , 2025
Uttarakhand govt mandates marriage registration under Uniform Civil Code for employees

You May Like