விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயத்தை முண்டியம்பாக்கம் பகுதியில் ஆண்கள் குடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! இதை நோட் பண்ணீங்களா..? உடனே இந்த வேலையை முடிங்க..!!