மொபைல் சார்ஜர் ஒயர் பட்டதில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் செல்போன் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் எங்குமே செல்ல முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதேநேரம் செல்போனை நாம் அலட்சியமாக அல்லது அபாயகரமான வகையில் பயன்படுத்துவதால் சில நேரம் மோசமான விபத்துகள் உண்டாகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
அந்த வகையில், தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞன், தனது படுக்கைக்கு அருகில் மொபைல் ஃபோனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதியன்று நடந்துள்ளது. உயிரிழந்த அந்த நபர் மாலோத் அனில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொதுவாக சார்ஜ் போடும் போது எல்லாம் உயிரிழப்புகள் நடக்காது. சார்ஜ் ஒயரில் இருந்து மின்சாரம் லீக் ஆகாது என்பதால் பலருக்கும் இந்த விபத்து எப்படி நடந்தது என்பதில் குழப்பம் இருக்கும். இதற்கிடையே, போலீசார் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அனில் படுக்கைக்கும் பிளக் பாயிண்டிற்கும் இடையே சற்று தூரம் இருந்துள்ளது. இதனால் மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு, படுத்துக் கொண்டே செல்போனை யூஸ் செய்ய அவரால் முடியவில்லை. இதனால் தனது மொபைலை சார்ஜ் செய்ய ஏதுவாக மின்சார ஓயரை தனது படுக்கை அருகே வரும்படி அவர் நீட்டித்துள்ளார்.
அதாவது மின்சாரம் பாயும் லைவ் ஓயர், ஸ்விட்ச் உட்பட எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் படுக்கை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைச் செய்துவிட்டு அப்படியே அவர் தூங்கிவிட்டார். தூக்கத்தில் அவர் திரும்பிப் படுக்கவே அந்த ஓயர் மீது அவரது உடல் பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஷாக் அடித்த நிலையில், வலியால் அலறி இருக்கிறார். இதையடுத்து, அனில் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்குத் திருணமாகி மனைவியும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர்.
Read More : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை..!! அதுவும் “Work From Home”..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!