நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை விவகாரத்து செய்வதாக அறிவித்த பின் சினிமா, பிட்னெஸ் என அவருக்கு பிடித்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு ஹிந்தி படத்தை தற்போது இயக்கி வரும் நிலையில், அதன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், உடலை பிட் ஆக வைக்க அவர் அடிக்கடி சைக்கிள் ஓட்டவும் நேரம் செலவிடுகிறார். அதன் புகைப்படங்களையும் அவர் அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.