fbpx

அதிர்ச்சியான நீதிபதி..!! கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி..!! எப்படி தெரியுமா..?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில், ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டன.

இந்நிலையில், புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையும் நடைபெற்றது. செந்தில் பாலாஜி ஆஜரானதை அடுத்து, அவருக்கான நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாக நீதிபதியிடம் சிறைக் காவலர் விளக்கம் அளித்தார்.

Read More : கடலுக்குள் மூழ்கும் சென்னை..!! கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள்..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

English Summary

Senthil Balaji, who is in judicial custody in Puzhal Jail, was produced in court today through video feed. Senthil Balaji was produced in a bedridden state and the investigation was conducted.

Chella

Next Post

”எதிர்காலத்தில் காத்திருக்கும் ஆபத்து”..!! ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Fri Aug 2 , 2024
The study revealed that there is a danger that in the future the water will become unsustainable.

You May Like