fbpx

அதிர்ச்சி..!! கள்ளக்குறிச்சியை தொடர்ந்து கோவையில் விஷச்சாராயம்..? இருவர் மருத்துவமனையில் அனுமதி..!!

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மலையடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் நேற்று டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். தொடர்ந்து நேற்று இரவு ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரன் (46) ஆகியோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”ரவிச்சந்திரனுக்கு ரத்த அழுத்தம் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். மகேந்திரனுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை” என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரவிச்சந்திரன், மகேந்திரன், ராமகிருஷ்ணன், ராஜன் என்கின்ற லட்சுமணன், செந்தில்குமார், முத்துக்குமார் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாவடப்பு மலை கிராமத்தில் இருந்து ஒரு லிட்டர் சாராய பாட்டிலை வாங்கி வந்துள்ளனர். 7 பேரும் சேர்ந்து கோபால்சாமி மலை அருகே உள்ள ஒரு தோப்பில் வைத்து குடித்துள்ளனர். அதில் ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர். இதனால், அப்பகுதியில் கள்ளச்சாராய புழக்கம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read More : ’அரசு விற்கும் மதுவில் கிக் இல்லை’..!! ’உழைப்பவர்களின் அசதியை போக்க மது தேவை’..!! அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு..!!

English Summary

Shocked!! Counterfeit liquor in Coimbatore following Kallakurichi..? Two admitted to hospital..!!

Chella

Next Post

மக்களே அலட்சியம் வேண்டாம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க..!!

Sat Jun 29 , 2024
Let's know about the symptoms of blood cancer.

You May Like