டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு ஆகியவைகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பாமாயில், காபி, கோகோ உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதனால் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிக்கும் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், விரைவில் டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனை என்பது சற்று குறைந்துள்ளது. குறிப்பாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), மாரிகோ (Marico), ஐடிசி (ITC), டாடா கன்சூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (TCPL) போன்ற பெரிய எஃப்எம்சிஜி நிறுவனங்களின் விற்பனைகள் சரிந்துள்ளன.
இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்வதற்காக பொருட்களின் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஜிசிபிஎல் நிறுவன உரிமையாளர் சுதீர் சிதாபதி கூறுகையில், ”இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டியில் பல இடையூறுகளை சந்தித்துள்ளோம். செலவுகளை குறைக்கவும், லாபத்தை மீட்டெடுக்கவும் விலை உயர்வை அமல்படுத்தும் திட்டம் உள்ளது” என்றார்.
அதேபோல், டாபர் இந்தியா நிறுவனமும் விலையேற்ற திட்டத்தில் உள்ளது. இந்நிறுவனம் டாபர் தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இதனால், டாபர் சியவன்ப்ராஷ், புதினா ஹாரா மற்றும் ரியல் ஜூஸ் ஆகியவற்றில் விலை அதிகரிக்கலாம். மேலும் நெஸ்லே இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சுரேஷ் நாராயணன் கூறுகையில், ”பழங்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை பாதித்துள்ளது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
Read More : உதயநிதியை வரவேற்க தடபுடல் ஏற்பாடு..!! பரிதாபமாக பறிபோன கூலித் தொழிலாளியின் உயிர்..!! தஞ்சையில் பரபரப்பு..!!