fbpx

அதிர்ச்சி..!! செய்தி சேகரிக்க சென்ற ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஏவுகணை தாக்குதலில் படுகொலை..!!

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் நடைபெற்று வரும் நிலையில், ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் தேதி ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் தாக்குதல் நடத்தினா். பின்னர், பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். 9000-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 8-வது நாளாக தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான போரில் லெபனானின் எல்லைப் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் இஸ்ஸாம் அப்துல்லா ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவர் லெபனான் எல்லை செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது நிறுவனத்தின் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தொடர்ச்சியான உதவிகளை வழங்க உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளனர். லெபனான் பிரதமர் நஜிப் மிக்தாய் இஸ்ரேல்தான் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த இஸ்ரேலுக்கான ஐநா தூதர், “இஸ்ரேல் ஒருபோதும் பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு அல்லது ஏவுகணை தாக்குதலை நடத்தாது. ஆனால், இங்கே போர் நடந்து கொண்டிருக்கிறது. போரில் பலர் கொல்லப்படுவதை தவிர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஹாட்ரிக் வெற்றி யாருக்கு?… இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

Sat Oct 14 , 2023
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே உலகக்கோப்பை தொடரின் 12 வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 12வது லீக் போட்டு இன்று நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 […]

You May Like