இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள பிரபலமான கோயில் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய தலமாக உள்ளது. தினசரி இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கோயிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். அவர் அனைவரும்போல கோயிலில் சுற்றியுள்ளார். அப்போது திடீரென கோயிலுக்குள் தனது ஆடைகளைக் கழற்றி விட்டு வினோதமாக நடந்து கொண்டார்.
அதோடு நிர்வாணமாக கோயிலை சுற்றி சுற்றிவந்து கும்பிடவும் தொடங்கினார். நிர்வாணமாக இளம் பெண் ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்து கோயிலில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ச்இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோயில் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரந்த போலீசார், நிர்வாணமாக சுற்றித்திரிந்த பெண்ணை மடக்கி ஆடை அணிய செய்தனர்.
மேலும், கோயிலில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், புனித தளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி அப்பெண்ணை கைது செய்தனர். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், கோயிலுக்குள் நிர்வாணமாக சென்ற அப்பெண் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்கு பின் அவரை மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.