fbpx

ஷாக்கிங்..!! கேஸ் விலை ரூ.1800, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170..!! அத்தியாசியப் பொருட்களின் விலை அதிரடி உயர்வு..!!

மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களில் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170-க்கும், கள்ளச்சந்தையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மணிப்பூரில், பெரும்பான்மையாக இருக்கும் ‘மெய்தி’ இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு கேட்பதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இது இருதரப்பினரிடையே கலவரமாக வெடித்தது. இதில், 70 பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, கலவரத்தை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அத்தியாவசியப் பொருட்களில் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.

சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாலும், தாக்குதல் நடக்குமோ என்ற லாரி அதிபர்களின் அச்சத்தாலும் வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் வருகை தடைபட்டது. இதனால், கைவசம் இருந்த பொருட்களின் இருப்பு குறைந்தது. அதனால், அப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110 முதல் ரூ.115 வரை மற்ற மாநிலங்களில் விற்கப்பட்டு வருகிறது. ஆனால், மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170-க்கு விற்கப்படுகிறது. ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் கள்ளச்சந்தையில் ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது.

அரிசி மூட்டை விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,800 ஆக உயர்ந்து விட்டது. உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. 30 முட்டைகள் கொண்ட பெட்டி ரூ.180இல் இருந்து ரூ.300 ஆக அதிகரித்து விட்டது. உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இப்பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு பாதுகாப்புப் படையினர் காவலாக சென்று வருகின்றனர். இல்லாவிட்டால், இப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. உள்ளூரிலேயே ஆடு, கோழிகள் கிடைப்பதால், இறைச்சி விலை மட்டும் உயரவில்லை.

Chella

Next Post

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வெள்ளை எள்..!! இன்னும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா..?

Thu May 25 , 2023
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் சிரமப்படுபவோர் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நிவாரணம் பெறலாம். அந்தவகையில், எள் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கலாம். ஆனால் அவை மிகவும் பயனுள்ள புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். வெள்ளை எள்ளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். லட்டுகள் தயாரிக்க பயன்படுத்துவதை தவிர, ரொட்டி மற்றும் இனிப்புகள் மீதும் தூவி சாப்பிடுவது நன்மை […]

You May Like