சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் செல்வபிரகாசம் இவர் கடந்த 4️ வருடங்களுக்கு முன்னர் லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சர்வேஸ்வரன் என்ற குழந்தை இருக்கிறது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மனைவி லாவண்யா கோபித்துக் கொண்டு குழந்தையை தன்னுடைய தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. செல்வ பிரகாசம் தனியாக வசித்து கொண்டிருக்கிறார் தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக லாவண்யாவின் பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்கு பிரகாசம் சென்றுள்ளார். ஆனால் அங்கு லாவண்யா இல்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் லாவண்யா குழந்தையுடன் விருகம்பாக்கத்தில் வசித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செல்வபிரகாசம் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டரை வயது மகன் இறந்து விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வபிரகாசம், இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.
அந்தப் புகாரில் தன்னுடைய இரண்டரை வயது மகன் இறந்துவிட்டதாகவும் தந்தையான எனக்கு தெரிவிக்காமலே மகனின் உடலை அடக்கம் செய்து விட்டார்கள் எனவும் புகாரியில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாங்காடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய போது இரண்டரை வயது குழந்தையை சர்வீஸ் அவர்களுக்கு தலையில் அடிபட்டு இறந்து விட்டதாகவும் கணவன் என்று தெரிவித்து தன்னுடைய கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவரை அழைத்துச் சென்று குழந்தையின் உடலை அடக்கம் செய்து விட்டதும் தெரிய வந்தது.
இதன் காரணமாக, காவல்துறை குழந்தையின் உடலை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்தனர். அறிக்கையில் குழந்தையின் தலையில் பலமாக தாக்கியதால் உயிரிழந்து போனதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, மணிகண்டனையும், லாவண்யாவையும் அழைத்து காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல உண்மைகள் வெளியாகி இருக்கிறது.
அதாவது கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த லாவன்யாவுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நான் அளவில் நெருக்கமாக இவர்கள் இருவரும் கள்ளக்காதலர்களாக மாறி உள்ளனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த போது குழந்தை சர்வேஸ்வரன் அதற்கு இடையூறாக இருந்ததாக தெரிவித்து கள்ளக்காதலனான மணிகண்டன் அந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் இருந்தபோது பைக்கில் ஏறுவதற்காக அந்த குழந்தையை வேகமாக தள்ளிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தை சர்வேஸ்வரனை மருத்துவமனையில் அனுமதித்தள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
கள்ள காதலுக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யாவின் கள்ளக்காதலன் மணிகண்டன் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து குழந்தையின் தாய் லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.