தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார் (வயது 62). இவர், சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றார். ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகள் அவருக்கும் வைக்கப்பட்டது. அவர் திரையில் தோன்றும்போது விசில் சத்தம் தெறித்தது. அதைத் தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் தான், சிவராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. தற்போது அடுத்தடுத்து 6 படங்கள் கையில் இருக்கும் நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இவர் தற்போது கமிட்டான படங்கள் கைவிடப்படுமா என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் நோயால் பாதிக்கப்படிருப்பது உண்மை. அதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். ஆனால், எனக்கு வந்திருப்பது புற்றுநோய் அல்ல. இன்னும் எனக்கு என்ன நோய் என்பதையே கண்டறியவில்லை. எனவே, ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம். நான் நலமுடன் வீடு திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : கொடநாடு வழக்கு..!! எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!