fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து..? அரசு பரபரப்பு விளக்கம்..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் கைரேகை பதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை எளிதில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளுக்கு வர முடியாத முதியோர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகும் என்று சமீபத்தில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகும் என வெளியான செய்தி உண்மையல்ல. ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. இது வெறும் வதந்தி தான். ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இவர்களுக்கு இலவசம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Mon Apr 24 , 2023
ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வே அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனி பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென கூறியிருக்கிறார். நீங்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் என்றால், தற்போது உங்களுக்கும் இலவசமாக உணவு கிடைக்கும். இந்திய ரயில்வேயில் பலமுறை பயணம் மேற்கொள்பவர்கள் ரயிலுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ரயில் பலமுறை தாமதமாகிறது. […]

You May Like