fbpx

அடி தூள்..!! பிப்ரவரி 5ஆம் தேதி பள்ளி – கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜனவரி 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 47 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். மேலும், இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் தவெக போட்டியிடதாதால், திமுக – நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில், அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஈரோடு மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி 5ஆம் தேதி அரசு, தனியார் அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”கையில் எலும்பு”..!! சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

English Summary

A government holiday has been declared for Erode district only on February 5th in view of the Erode East constituency by-election.

Chella

Next Post

மாட்டிறைச்சி சாப்பிடுறீங்க.. கோமியம் மருந்து என சொன்னால் ஏன் எதிர்க்குறீங்க..? - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

Tue Jan 21 , 2025
You eat beef.. why do you object if it is said that it is a medicine..? - Speech by Tamilisai Soundararajan

You May Like