fbpx

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்..! அரசு உத்தரவு

ஜி-20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் வருகை தர உள்ளனர். டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடப்பதையொட்டி செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வான்பரப்பில் டிரோன்கள், டிரோன் கேமிராக்கள், ரிமோட் ஏர் கிராப்ட், சிறிய வகை விமானங்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, ஆகிய 5 நாட்களுக்கு டெல்லியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Kathir

Next Post

ஐதராபாத்தில் பரவிவரும் அடையாளம் காணப்படாத சுவாச வைரஸ்!… அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் இதோ!

Mon Sep 4 , 2023
ஹைதராபாத்தில் மர்ம சுவாச வைரஸ் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . சுவாசிப்பதில் சிரமம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு போன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் மற்றும் அடினோ வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் கூடிய கடுமையான வைரஸ் நோய் ஹைதராபாத்தில் பரவி வருகிறது, இது கொமொர்பிட் நிலைமைகள் கொண்ட குழந்தைகள் அல்லது பெரியவர்களை பாதிக்கிறது. மர்ம வைரஸ் அடினோ, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா அல்லது மெர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாக […]

You May Like