fbpx

உங்ககிட்ட கூகுள் பே, ஃபோன் பே இருக்கா..? மத்திய அரசின் இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா..?

இந்திய ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் போன் பே ஆகிய செயலிகள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தது.

அந்த அறிக்கையில், வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இனி இந்தியாவை சேர்ந்த செயலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் இந்தியா செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, NPCI (national payments corporation of india) என்ற இந்திய அமைப்பு BHIM-யை தனி நிறுவனமாக பிரித்துள்ளது. இனி BHIM செயலி, NPCI BHIM பிரைவேட் லிமிடெட் என்று தனி நிறுவனமாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தேவை அதிகமாவதால் இவ்வாறு பிரித்துள்ளதாக NPCI கூறியுள்ளது. இதனால் அனைவரும் BHIM செயலியை அதிகமாக உபயோகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! இந்த அறிவிப்புகளை கவனிச்சீங்களா..?

English Summary

NPCI (National Payments Corporation of India) has demerged BHIM as a separate entity.

Chella

Next Post

உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்!. ஆர்பிஐ எச்சரிக்கை!

Tue Aug 20 , 2024
Change in food prices! RBI Alert!

You May Like