fbpx

அரசு ஊழியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! அரியர் தொகை கிடையாது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020இல் ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA அரியர் தொகை எப்போதுமே வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 18 மாதங்களாக சம்பள உயர்வு போடப்படவில்லை. அதனை அரியர் தொகையாக திருப்பித் தருவார்கள் என்று அரசு ஊழியர்கள் நம்பி வந்தனர். அந்த பணத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா..? நோபல் கமிட்டி துணை தலைவர் சொன்ன தகவல்..

Thu Mar 16 , 2023
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய போட்டியாளர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். நோபல் பரிசு குழு என்பது, நோபல் பரிசு வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவாகும். இந்த குழு இந்தியா வந்துள்ள நிலையில், அக்குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், உலகின் அமைதியின் மிகவும் நம்பகமான தலைவர்களில் பிரதமர் மோடியும் […]

You May Like