fbpx

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!! கச்சா எண்ணெய் விலை உயர்வு..!! பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம்..!!

இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 85% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவில் இருந்து தினமும் 3 லட்சம் பேரல்களும், சவுதி அரேபியாவில் இருந்து 10 லட்சம் பேரல்களும் இறக்குமதி செய்யப்படுகிறது. சவூதி அரேபியா உலக சந்தைக்கான விநியோகத்தை டிசம்பர் இறுதி வரை ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்களாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளது.

இந்தாண்டு முதல் முறையாக பேரல் ஒன்று பேரலுக்கு 89.67 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17 மாதங்களாக ஒரே விலையில் நீடிக்கிறது. சர்வதேச எரிபொருள் விலைகளின் 15 நாள் சுழற்சியின் அடிப்படையில் தினசரி எரிபொருள் விலையை சில்லறை விற்பனையாளர்கள் மாற்றியமைக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்குகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், எரிபொருள் விலை உயர்வு, அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விலும் பெரிய அளவில் பிரதிபலிக்கும்.

இதுகுறித்து பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் கூறுகையில், விலை ஏற்ற இறக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்தாண்டு மே மாதம் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதை ஈடுகட்ட, உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, விலையை குறைக்கவில்லை. மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இம்முறை விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்.

Chella

Next Post

”இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க”..!! ”காது கேட்காம கூட போகலாம்”..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Thu Sep 7 , 2023
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய பலரும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோம். சிலரோ தினமும் ஒரு முறையாவது இந்த பட்ஸை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், காதில் இயர்பட்ஸ்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மட்டும் பட்ஸை பயன்படுத்தினால் போதும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். காதுகளுக்குள் உருவாகும் மெழுகு […]

You May Like