fbpx

ஆயுத பூஜையன்று அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை..!! வாடிய முகத்துடன் இல்லத்தரசிகள்..!!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவது உண்டு. அந்த வகையில், இன்று ஆயுதபூஜை தினத்தன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆயுதபூஜையன்று அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை..!! வாடிய முகத்துடன் இல்லத்தரசிகள்..!!

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை, ரூ.4.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

6 ஆண்டுகள் குழந்தை இல்லை... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!!! மகிழ்ச்சியில் திருவாரூர் தம்பதிகள்...

Tue Oct 4 , 2022
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பமான நாள்முதல் டாக்டர்களின் ஆலோசனைப்படி இருந்து வந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு […]

You May Like