கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீசிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த மாணவிகள் சிலர் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடினார்.
இதையடுத்து, வலியால் துடித்த மாணவிகள் மூவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவிகள் மீது ஆசிட் வீசிய அபின் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், மாணவிகள் மீது அந்த நபர் எதற்காக ஆசிட் வீசிச்சென்றார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கர்நாடகாவில் தேர்வெழுதச் சென்ற மாணவிகள் மீது ஆசிட் வீசிய நிகழ்வால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More : Bomb | பள்ளிகளில் மீண்டும் வெடிகுண்டா..? பதறியடித்து ஓடிய மாணவர்கள்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!