fbpx

அதிர்ச்சி வீடியோ..!! 18-வது மாடியில் இருந்து பொத்தென கீழே விழுந்த இளம்பெண்..!! உயிர்பிழைத்த அதிசயம்..!!

ரஷ்யாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சைபீரிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியுள்ளார். இவருக்கு வயது 22. இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18-வது மாடியில் தங்கியிருந்தார். இவர், கடந்த ஜூலை 18ஆம் தேதி ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் புல் தரையில் விழுந்த நிலையில், கொஞ்சமும் சேதாரமின்றி சிறிது நேரம் கழித்து சற்று நிதானமாக எழுந்து நின்றார்.

இதைப் பார்த்து அங்கிருந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்த விபத்தில் ஒரு சின்ன எலும்பு முறிவு கூட ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். இருப்பினும் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், 18-வது மாடியில் இருந்து கீழே குதித்தும் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு உட்பட எந்த ஒரு காயங்களும் ஏற்படாமல் உயிர் பிழைத்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதிகள்..!! என்ன காரணம்..?

English Summary

It’s amazing that the woman who jumped from the 18th floor survived without any injuries, including broken bones.

Chella

Next Post

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எடப்பாடி பழனிசாமி..!! எதற்காக தெரியுமா..?

Fri Jul 26 , 2024
Edappadi Palaniswami's side sought an apology in the Madras High Court for filing a petition mentioning him as AIADMK General Secretary.

You May Like