தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வார்கள். நோங்புவா லம்பு என்ற பகுதியில் இந்தகாப்பகம் செயல்பட்டு வருகின்றது.
இக்காப்பகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தி உள்ளே நுழைந்து அங்கிருந்த குழந்தைகளை படபட படபட வென்று தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த விபத்தில் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான். முன்னதாக தன் குடும்பத்தையும் அவன் சுட்டுக் கொன்றுள்ளான்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் , அந்த நபர் பன்யா காம்ராப் என்பவராவார். இவர் போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையவர். முன்னதாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இக்குற்றச்சாட்டை அடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2020ம் ஆண்டு இதே போல ராணுவ அதிகாரி ஒருவரால் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அதில் 29 பேர் கொல்லப்பட்ட நிலையில் 57 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர். தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.