fbpx

அதிமுக உங்ககிட்ட சீட்டு கேட்டு நிக்கணுமா? நாண்டுக்கிட்டு செத்துப் போவோம்..!! வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜூ..!!

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ”திமுகவை பட்டித் தொட்டி எங்கும் இன்றைக்கு 50 வயதை கடந்த அனைவரையும் அறியச் செய்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். 67-இல் ஆட்சியைப் பிடித்தவுடன் அண்ணா எனக்கு மாலை மரியாதை போடுவதை விட தம்பி எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அணிவியுங்கள். இந்த வெற்றிக்கு அவன் தான் காரணம் எனக் கூறியவர் அண்ணா.

இன்றைக்கு நடிகர் என்று கூறுகிறார். திமுக அமைச்சரவையில் உள்ள த.மோ.அன்பரசன் உன்னால திமுகவை வளர்த்திருக்க முடியுமா.? உன்னுடைய தொகுதியை வளர்த்து இருப்பியா? உன்னுடைய வீட்டின் அருகாமையில் வளர்த்திருப்பியா.? திமுகவை வளர்த்தது உனக்கு என்ன தெரியும்? எம்ஜிஆரை யாரும் குற்றம் சொல்ல முடியாது. ஒரு எளிய தலைவரை நடிகர் என்று சொல்லலாமா.?

சட்டப்பேரவையில், கச்சத்தீவை பற்றி பேசும்பொழுது திமுக காரனுக்கு யாருக்கும் எந்த யோக்கியதையும் இல்லை என கைநீட்டி பேசி உங்கள் தலைவரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டபோது, திமுக சட்டமன்ற உறுப்பினராக வாயை பொத்திக்கொண்டு மூடிக்கொண்டுதான் இருந்தீர்கள். அன்னைக்கு உங்களுக்கு தெரியலையா.? எங்க அம்மா நடிகை என்று.?

கலைஞர் என்ன நடிகர் இல்லையா? காகிதப்பூ கதாநாயகன் தானே கலைஞர். தாமோ அன்பரசனுக்கு அரசியலே தெரியவில்லை. எதிர்க்கட்சியை விமர்சனம் செய்யும் என்ற வகையில் தன்னுடைய திமுக குடும்பத்தினரையே அன்பரசன் திட்டுகிறார். ஸ்டாலின் ஒரு நடிகர்.! அவங்க அப்பா ஒரு நடிகர்.! 1971ஆண்டு வரை திமுக அரியணை ஏற முடிந்தது. அதிமுக தொடங்கிய பிறகு அரியணை உங்களால் ஏற முடிந்ததா.? புரட்சித்தலைவர் இருந்தவரை கோட்டை பக்கம் திமுகவினரால் வர முடிந்ததா.?

அதைவிட பாஜகவில் தலைவராக இருக்கிறவர் நேற்று முளைத்த காளான் போல எனக்கு எப்போதுமே அவரை பிடிக்காது. நாம என்னமோ அவரிடம் கூட்டணிக்கு பேசினமாதிரி அவர் சொல்றாரு. இனிமேல் அதிமுக தலைமை ஏற்க நாங்கள் விரும்ப மாட்டோம். எங்க கிட்ட கேட்டு தான் அதிமுக போக வேண்டும் என கூறுகிறார். அந்த மாதிரி பொழப்பு வந்தா நாங்க நாண்டுக்கிட்டு செத்துப் போவோம். நீ எல்லாம் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு..?

அதிமுக வந்து உங்களிடம் சீட்டு கேட்டு நாங்க நிக்கணுமா? என்ன வாய்க்கொழுப்போடு பேசுகிறார் .? அண்ணாமலை இருக்கும் வரை பாஜக சாமியாராக தான் போக வேண்டும். 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும். உன்னை போல உட்கார வைத்து பதவிக்கு வந்தவர்கள் அல்ல எடப்பாடியார்.! தொண்டனால் உட்கார வைத்து அழகு பார்க்கப்பட்டவர்” என்று பேசியுள்ளார்.

Read More : ஊக்கமருந்து..!! இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு தடை..!!

English Summary

I will always dislike the BJP leader like a mushroom that sprouted yesterday. He tells us as if we are talking to him about the alliance.

Chella

Next Post

வினேஷ் போகட்-க்கு பாரத ரத்னா? ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் கோரிக்கை..!!

Tue Aug 13 , 2024
Vinesh Phogat, who participated in the Olympics, was disqualified for being 100 grams overweight. In this case, many people are trending on Twitter to give him the count

You May Like