fbpx

பெட்ரோல்குண்டு கலாச்சாரத்து முடிவுகட்ட வேண்டும்… கமல்ஹாசன் அறிக்கை

தமிழகத்தில் பெட்ரோல்குண்டு கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்அறிக்கையில் ’’தமிழகத்தில் இந்து முன்னணி , ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகுள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு , தீ வைப்பு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளனர். ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க. ரசிகர்கள் அல்ல. ஜனநாயகத்தின் தொண்டர்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதிப்பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை , வெடிகுண்டு கலவர கலாச்சாரத்திற்கு மாற்ற முயற்சி செய்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கி , சட்டம் ஒழுங்கையும் , அமைதியையும் பாதுகாக்க வேண்டும் ’’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’’ ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்தகாலத்தையே நினைவூட்டுகின்றன. தாங்களே தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி, தங்களது வாகனத்தை எரித்து அரசியல் லாபம் ஈட்ட முயன்ற பா.ஜ.க.வின் நிர்வாகிகளது முந்தையச் செயல்பாடுகள் யாவும் சமகால சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.

’இனி அரசுக்கே இடம் தேவையென்றால் ஜி-ஸ்கொயர் நிறுவனத்திடம்தான் வாங்க வேண்டும்’..! சீமான் விமர்சனம்

வருகிற நாடாளுமன்றத்தேர்தலை மனதில்கொண்டு பெரும் மதக்கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டு வரும் இந்துத்துவ கும்பலின் சதிச்செயல்களுக்கு இரையாகாது, தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

அழிக்கப்படும் மாங்குரோவ் காடுகள்; நவி மும்பையில் லாரிகளை நிறுத்த நடக்கும் அட்டூழியம்..!!

Sun Sep 25 , 2022
மும்பை மற்றும் சுற்றி இருக்கும் பகுதிகளில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு நில காடு அதிகளவில் உள்ளது. இந்த காடுகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நவிமும்பை, வசாய் போன்ற பகுதிகளில் சமூகவிரோத கும்பலால் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.. இந்தநிலையில் நவிமும்பையில் உரன் தாலுகாவில் இருக்கும் துடும் பகுதியில் லாரி நிறுத்தத்திற்காக மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட அதிர்ச்சி […]

You May Like