fbpx

”காட்டவா அந்த மெசேஜை காட்டவா”..? நடுரோட்டில் வைத்து இளைஞரை செருப்பால் அடித்த பெண்..!!

இன்றைய இளம் வயதினர் பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே விரும்புகின்றனர். குறிப்பாக, சில இளைஞர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்களை தொடர்பு கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெண்கள் பேச ஆரம்பித்துவிட்டால், அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி, போட்டோக்களை அனுப்பச்சொல்லி கேட்கின்றனர். பின்னர், அந்த போட்டோக்களை ஒருசிலர் மார்பிங் செய்து அதனை வைத்து, மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் ஒரு பெண் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞருக்கு தக்க பதிலடி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவாலி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் கல்யாண் என்ற இளைஞர் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ஆபாச மெசேஜ் அனுப்பிய அந்த இளைஞரிடம் எப்படியோ பேசி முகவரியை வாங்கியிருக்கிறார் அந்த பெண். அப்போது அந்த இளைஞர் தனது பகுதியிலுள்ள பேக்கரியில் உள்ள டீக்கடையில் வேலைசெய்து வந்தது தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அங்குசென்ற அந்த பெண், ஏன் எதற்கு என்று எதையும் தெரிவிக்காமல் அந்த நபரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றபோதுதான், தனக்கு அந்த இளைஞர் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், அதனால் முகவரி கேட்டு அவரை தேடிவந்து செருப்பால் அடித்ததாக கூறியிருக்கிறார். நடுரோட்டில் வைத்து பெண் ஒருவர் இளைஞரை செருப்பால் அடித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

விஷமிகளால் தூண்டி விடப்பட்ட காட்டு தீ…..! 250 ஏக்கர் வனப்பகுதி நாசம் கர்நாடகாவில் பரபரப்பு…..!

Mon Mar 13 , 2023
போன ஒரு மாத காலத்தில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டான காட்டுத்தீ காரணமாக, சற்றேற குறைய 250 ஹெக்டர் வனப்பகுதி சாம்பலாய் போனது. துரதிஷ்டவசமாக இந்த காட்டு தீ அதிக அளவில் விஷமிகளால் பரப்பி விடப்பட்டது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நரசிம்ம ராஜபுரா தாலுகாவின் சிக்க அக்ரஹாரா மலைத்தொடர் மற்றும் குத்ரேமுக் எல்லை பகுதிகளில் பெரிய அளவில் காட்டுத்தீ பரவி இருக்கிறது. சிக்கமகளூரு தாலுகாவில் […]

You May Like