மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது.
ஹார்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக இருந்து வருவதால், ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு அவர்தான் இந்திய அணியை வழிநடத்துவார் எனக் கருதப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா விளையாட முடியாத நிலை இருப்பதால், ஹார்திக் பாண்டியாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது ஆபத்தாகும். ஏனென்றால், டெஸ்ட் விளையாடும்போது, மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆகையால், ஹார்த்திக்கை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க முடியாத சூழல் இருக்கிறது.
ஆகையால், ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு மூன்றுவித இந்திய அணிக்கும் ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க அஜித் அகார்கர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தகவல் வெளியான அடுத்த நாளே ஷ்ரேயஸ் ஐயர் வலைபயிற்சியை தொடங்கிவிட்டார். காயம் காரணமாக அவர் ஓய்வில் இருந்த நிலையில், திடீரென்று உடனே பயிற்சியை தொடங்கியிருக்கிறார். ஆகையால், விரைவில் டி20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது