கேரளாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலோர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமரம்பலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள வணிக கட்டிடத்தை முஸ்லிம் வழிபாட்டுத் தலமாக மாற்றக் கோரி நூருல் இஸ்லாம் சம்ஸ்காரிகா சங்கம் தொடுத்த மனுவை நீதிபதி பி வி குன்கிகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார். இந்தக் கட்டிடத்தின் 5 கிமீ சுற்றளவில் சுமார் 36 மசூதிகள் உள்ள இடத்தில் உள்ள வணிகக் கட்டிடத்தை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக மாற்ற முயன்றதாகவும், “பின்னர் ஏன் மனுதாரருக்கு இன்னொரு பிரார்த்தனை கூடம் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புனித குர்ஆன் வசனங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மசூதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் மசூதி அவசியம் என்று வசனங்களில் கூறப்படவில்லை என குர்ஆனில் கூறியதை நீதிபதியும் மேற்கோள் காட்டினார். மேலும் கேரளாவில் மத வழிபாட்டுத் தலங்கள் நிரம்பி வழிகின்றன என்று நீதிபதி பிவி குன்கிகிருஷ்ணன் கூறினார். “கேரளாவின் தனித்துவமான புவியியல் இருப்பிடம் காரணமாக, இது கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படுகிறது.
மத ஸ்தலங்கள் மற்றும் பிரார்த்தனை கூடங்கள் அரிதான இடங்களைத் தவிர வேறு எந்த புதிய மத ஸ்தலங்களையும் பிரார்த்தனை கூடங்களையும் அனுமதிக்கும் நிலையில் நீதிமன்றம் இல்லை. மேலும் சட்ட விரோதமாக இயங்கி வரும் அனைத்து வழிபட்டு தளங்களையும் அகற்றுமாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.