சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே மது கூடங்களுடன் கூடிய 2️ அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதுக்கடை திறக்கப்படாத சமயங்களில் மது கடைகளிலும், அதனை ஒட்டி திறந்தவெளியிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.
இதனை முன்னிட்டு சென்ற வாரம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு மது கூடங்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு திறந்தவெளியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை கைது செய்தனர் காவல்துறை சார்ந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தவறியதற்காக சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோவை சிவகங்கை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
இதைக் கேள்வியுற்ற ஜான் பிரிட்டோ காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரை சக காவலர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தகைய நிலையில், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டிஐஜி துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.