எங்களுடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி என்று சொல்லப்படும், எஸ்.ஐ.டி.பி.ஐ வங்கி ஆனது வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு புதிய தற்போதைய வெளியிட்டு இருக்கிறது. இதில் காலியாக இருக்கின்ற Audit consultant பணிக்கான ஐந்து காலி பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 35 வயதிற்கு உட்பட்ட நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு, விண்ணப்பிக்க தேவைப்படும் தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்களையும் இந்த செய்தி குறிப்பில் வழங்கி இருக்கின்றோம். விருப்பமானவர்கள் இறுதி நாள் முடிவடைவதற்கும் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் chaartered accountants தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின், அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வயது தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கென விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து, cal_ho@sidbi.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 6/9/2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.