fbpx

சி.டி.ரவிக்கு எதிராக போட்டியிட்டால்.. சித்தராமையாவுக்கு ரூ.1 கோடி பரிசு.. களைகட்டும் தேர்தல் களம்..

கர்நாடகவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. 2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உள்ளன.. 

குஜராத், இமாச்சல் தேர்தலில் இந்த கட்சிதான் வெற்றி பெறும்..!! அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்..!!

இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணா என்ற நபர், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரான சி.டி.ரவியை எதிர்த்து, காங்கிரஸ் தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான சித்தராமையா போட்டியிட்டால், 1 கோடி ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ நான் சித்தராமையாவின் உண்மையான ரசிகன். சிக்கமகளூரு தொகுதியில் சித்தராமையா தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு ஒரு கோடி ரூபாய் தருவது மட்டுமின்றி, இரவு பகலாக பிரசாரம் செய்வேன் என்றும் தெரிவித்தார்..

யாத்கிரி மற்றும் ராய்ச்சூரில் உள்ள சிலர் தங்கள் தொகுதியில் போட்டியிட சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து தற்போது பாலகிருஷ்ணா இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.. காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி பாஜகவினர் மத்தியிலும் ரசிகர்கள் இருப்பதாக தெரிகிறது. கடந்த வாரம், யாத்கிரியை சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், யாத்கிரி தொகுதியில் போட்டியிட சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் யாத்கிரி தொகுதியில் போட்டியிட்டால் எனது 7 ஏக்கர் நிலத்தை விற்று தேர்தல் செலவுக்காக ₹1 கோடி செலவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.. சித்தராமையா எங்கள் தொகுதியில் போட்டியிட்டால், பாஜகவை விட்டு காங்கிரசில் இணைவேன் என்றும் கூறி இருந்தார்..

ராய்ச்சூரை சேர்ந்த மற்றொரு ரசிகர் சித்தராமையா மாவட்டத்திற்கு வந்து 2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால், தனது 2 ஏக்கர் விளை நிலத்தை விற்று தேர்தல் செலவுக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா வெற்றி பெற்ற பாதாமி தொகுதி மக்களும், அவர் தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கோலாரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக ஜனவரி மாதம் சித்தராமையா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

கொடூரம்..!! கர்ப்பிணியை எட்டி உதைத்த அண்ணி..!! பிறந்த உடனே குழந்தை இறந்த பரிதாபம்..!!

Tue Feb 7 , 2023
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அவதார ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கௌசல்யா (32). இவர், கர்ப்பமாக இருந்ததால், பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையே, கெளசல்யாவின் அண்ணன் விஜய சிம்மன். அவரது மனைவி துர்காபாய். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி கௌசல்யா வீட்டிற்கு […]
கொடூரம்..!! கர்ப்பிணியை எட்டி உதைத்த அண்ணி..!! பிறந்த உடனே குழந்தை இறந்த பரிதாபம்..!!

You May Like