சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் செல்லக்கூடிய ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய புறநகர் மின்சார ரயில், சிக்னல் கோளாறு காரணமாக பேசின் பிரிட்ஜ்க்கும் கொருக்குப்பேட்டைக்கும் இடையே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் உள்ள பயணிகள் தண்டவாளத்தின் மீது நடந்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இதே வழி தடத்தில் கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.