fbpx

மரவள்ளி கிழங்கில் சூப்பரான அடை ரெசிபி.! மறக்காமல் ட்ரை பண்ணி பாருங்க.!

மர வள்ளி கிழங்கை பயன்படுத்தி இதற்கு முன்பு சிப்ஸ் மற்றும் காரமான ஸ்னாக்ஸ் செய்து கேள்விப்பட்டிருப்போம். இந்தக் கிழங்கை வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் எளிமையான செய்முறையாகும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த அடை செய்வதற்கு 1/4 கிலோ மரவள்ளி கிழங்கு, 150 கிராம் இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி, 100 கிராம் நாட்டு வெல்லம், இரண்டு ஏலக்காய், ஒரு மூடி துருவிய தேங்காய் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நெய் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை நன்றாக கழுவி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்போது மிக்ஸி எடுத்து அதில் உறவைத்த அரிசி மற்றும் மரவள்ளி கிழங்கு சேர்த்து அரிசியை ஊற வைத்த தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் நாட்டு சர்க்கரை ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இவை முழுவதும் அரைந்து மாவு பதத்திற்கு வந்ததும் மிக்ஸி ஜாரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து அது நன்றாக சூடானதும் சிறிதளவு நெய் ஊற்றி அதில் அடை மாவை பரப்பி நெய் அல்லது நெய்யை பற்றி ஊற்றி ஒரு புறம் நன்றாக வெந்ததும் மீண்டும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும். சுவையான மற்றும் தித்திப்பான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி வாங்க சாப்பிடலாம்.

Next Post

"அடேங்கப்பா..."! டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா.? முன்னரே உங்கள் வேலையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.!

Fri Dec 1 , 2023
இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாத தொடக்கத்திற்கு […]

You May Like