fbpx

‘இன்ஸ்டன்ட்’ புத்துணர்ச்சிக்கு இந்த ‘காஷ்மீரி கஹ்வா’ ட்ரை பண்ணி பாருங்க.? சிம்பிள் ரெஸிபி.!

காஷ்மீர் இயற்கை அளவிற்கு பெயர் பெயர் பெற்றதைப் போல அங்குள்ள உணவுகளும் சுவை மற்றும் தரத்திற்கு புகழ்பெற்றவை ஆகும். காஷ்மீரின் தனித்துவமான காஷ்மீரி டீ அல்லது காஷ்மீர் கஹ்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த பானம் தயாரிப்பதற்கு 4 டீஸ்பூன் தேயிலை, 1/4 டீஸ்பூன் குங்குமப்பூ, சிறுதுண்டு இலவங்கப்பட்டை, 2 ஏலக்காய், 2 கிராம்பு, 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/4 கப் பாதாம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/4 டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இப்போது மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து அவற்றுடன் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கொதித்த பின்னர் இவற்றுடன் தேயிலை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பின்னர் 2 நிமிடம் கழித்து இந்த தேநீரை வடிகட்டி எடுக்கவும்.

இவற்றை குங்குமப்பூவுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இந்த தேநீர் நன்றாக கொதித்து வரும்போது இவற்றுடன் கால் கப் பாதாம் சேர்த்து ஒரு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கப்பில் ஊற்றி பரிமாறவும். சுவையான மற்றும் சத்து நிறைந்த காஷ்மீரி கஹ்வா ரெடி. இது குளிர் காலத்தில் பருகுவதற்கு சிறந்த பானமாகும். உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு குளிர் நேரத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.

Next Post

Alert..! 10 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்...!

Sun Dec 3 , 2023
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 340 கி.மீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌ தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் […]

You May Like