fbpx

அழுக்கான உங்கள் பழைய டீ வடிகட்டியை புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ சட்டுன்னு இதை செய்யுங்க..

பெரும்பாலானோரின் சமயலறையில், அழுக்காக இருக்கும் ஒரு பொருள் என்றால் அது டி வடிகட்டியாகத் தான் இருக்கும். நாம் என்ன தான் கழுவினாலும், டீ வடிகட்டியில் உள்ள வலை சில நாட்களுக்குப் பிறகு கருப்பாகிவிடும். இதனால் சிலர் அதை தூக்கி போட்டு விட்டு, புதிது வாங்கி விடுவார்கள். இன்னும் சிலர் கருப்பாக இருந்தாலும் பயன்படுத்துவார்கள். ஆனால் இது பார்க்க சிலர் சங்கடமாக நினைப்பார்கள். ஆனால் இனி உங்களுக்கு கவலையே வேண்டாம்.

கரை பிடித்த உங்கள் பழைய டீ வடிகட்டியை எப்படி புதிது போல பளபளப்பாக மாற்றலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். கருப்பாகிவிட்ட தேநீர் சல்லடையைப் புதிது போல் பளபளப்பாக்க மாற்ற வினிகர் பெரிதும் உதவும். இதற்கு ஒரு கப் சூடான நீரில், வினிகரை கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் டீ வடிகட்டும் சல்லடையை சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து, பாத்திரம் கழுவும் இரும்பு ஸ்க்ரப்பை கொண்டு தேய்த்தால் மட்டும் போதும்.

உங்கள் வீட்டில் வினிகர் இல்லையென்றால், நீங்கள் அதற்கு பதில் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதற்கு எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதில் ஒரு பாதியைக் கொண்டு டீ வடிகட்யை நன்கு தேய்க்கவும். பின்னர் பாத்திரம் துலக்கும் சோப்பை பயன்படுத்தி தேய்க்கவும். இப்போது டீ வடிகட்டியை தண்ணீரில் கழுவினால் அழுக்கு நீங்கி, புதுசு போல் வெண்மையாகும். நீங்கள், பேக்கிங் சோடாவை பயன்படுத்தியும் அழுக்கு டீ சல்லடையை சுத்தம் செய்யலாம்.

இதற்கு சிறிது தண்ணீரை சூடாக்கி, அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அந்த நீரில் சல்லடையை ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் புதுசு போல் வெண்மையாக மாறிவிடும். நீங்கள் இந்த சுலபமான வழிகளை பின்பற்றி உங்கள் பழைய டீ வடிகட்டியை சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

Read more: தாங்க முடியாத குதிகால் வலியா? தொடர்ந்து 3 நாள் இதை மட்டும் செய்யுங்க.. சாகும் வரை வலி திரும்ப வரவே வராது..

English Summary

simple tips to clean your old tea filter

Next Post

தேசிய செய்தித்தாள் தினம் 2025!. இந்தியாவின் அச்சு ஊடகத்தைப் பற்றிய வரலாறு; முக்கியத்துவம்!.

Wed Jan 29 , 2025
National Newspaper Day 2025!. History of India's print media; Importance!.

You May Like