fbpx

”சார் என்ன விட்ருங்க”..!! கெஞ்சிய மாணவி..!! விடாத உடற்கல்வி ஆசிரியர்..!! கூண்டோடு மாற்றம் செய்து நடவடிக்கை..!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் உள்பட சில ஆசிரியர்களிடம் அந்த மாணவி புகார் கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். இதையடுத்து, சம்பவம் குறித்து பள்ளி மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ஆனந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி, புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று 10 ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். பணி ஓய்வு பெறும் நாளிலேயே தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் கட்டுப்பாடு..!! ஊழியர்கள் மகிழ்ச்சி..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

English Summary

The school education department has ordered the removal of the head teacher of the school who did not take any action despite the victim student’s complaint.

Chella

Next Post

புதிய மதுவிலக்கு திருத்தச் சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் இதோ!!

Mon Jul 1 , 2024
In order to completely eliminate counterfeit liquor, an amendment has been brought to impose severe penalties on those who manufacture and sell it, with rigorous imprisonment for life and a fine of up to 10 lakh rupees.

You May Like