fbpx

”அண்ணி ஒரு டைம் உங்க கூட”..!! உடலுறவுக்கு மறுத்ததால் குழந்தையை கொன்று ஸ்பீக்கர் பெட்டியில் அடைத்த கொடூரன்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி-ஜெகதீஷ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டரை வயதில் திருமூர்த்தி என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தை கடந்த 17ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, குழந்தை திடீரென காணாமல் போனதால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், திருப்பாலந்தல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குழந்தையை தொலைத்திருந்த ஜெகதீஷ்வரிக்கு ஆறுதல் சொல்வதற்காக அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது பெண் ஒருவர் அங்கிருந்த ஸ்பீக்கர் பெட்டியை எதேச்சையாக தள்ளிவிட்டதில் அதன் இடைவெளியில் குழந்தையின் கை தெரிந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ்வரி உறவினர்களின் உதவியோடு ஸ்பீக்கரை திறந்து பார்த்த போது அதனுள் குழந்தையின் சடலம் இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக குருமூர்த்தியின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் தலைமறைவானார். அவர் நேற்று திருப்பாலபந்தல் கிராம நிர்வாக அலுவரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரித்ததில் பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வரும் தனது அண்ணன் மற்று அப்பாவுக்கு உதவி செய்வதற்காக பெங்களூருக்கு சென்றதாகவும், அப்போது வீட்டிற்கு வருகையில் தனது அண்ணன் மனைவி ஜெகதீஷ்வரி மீது ஆசை கொண்டதாகவும், இதுகுறித்து பலமுறை அவரிடம் கேட்ட போதும் அவர் இணங்க மறுத்ததால் அவரை பழிவாங்குவதற்காக அவரது குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது அண்ணி மீது கொண்ட தவறான எண்ணத்திற்கு அவர் உடன்படாததால் அவரை பழிவாங்க இரண்டரை வயது குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இந்த அவசர எச்சரிக்கை செய்தி உங்களுக்கும் வந்ததா..? உடனே நீங்கள் செய்ய வேண்டியவை..!!

Thu Sep 21 , 2023
பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, தற்போது காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் இயற்கை பேரிடர் அச்சுறுத்தல்கள் உள்ளன. திடீர் வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு அலார்ட் செய்யும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு […]

You May Like