fbpx

நூறு கோடியை நெருங்கும் அமரன்.. மூன்றாம் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். மறைந்த மேஜரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. தீபாவளி பண்டிகைக்கு வெளியான ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் ஆகிய படங்களை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் மாஸ் காட்டி வருகிறது அமரன் திரைப்படம். அமரன் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.42 கோடி வசூலித்திருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் இருந்தது.

இரண்டாம் நாளில் 35 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், மூன்றாம் நாளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி, வசூல் வேட்டையை தொடர்ந்துள்ளது. அந்த வகையில் அமரன் திரைப்படம் மூன்றாம் நாளில் ரூ.30 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

Read more ; நீட் தேர்வு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை.. தவெக நிறைவேற்றிய 26 தீர்மானங்கள் என்ன?

English Summary

Sivakarthikeyan and Sai Pallavi starrer ‘Amaran’ released in the theaters and received huge response.

Next Post

அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு.. உடல் முழுவதும் காயம்.. பணிப்பெண் கொலை வழக்கில் திருப்பம்!! - பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்

Sun Nov 3 , 2024
The postmortem results of the minor maid's murder case in Chennai have been released.

You May Like