சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் மாறி உள்ளார். நடிகர், பாடலாசிரியர், பின்னணி, தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட நட்சத்திரமாக வலம் வருகிறார். தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த அவர் இடையே பல சறுக்கல்களையும் சந்தித்தார். எனினும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் படத்தின் மூலம் வசூல் மன்னனாக மாறினார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதது. இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. .
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமும் இதுதான்.
இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் சுதா கோங்கராவின் நடிப்பில் பராசக்தி படத்திலும் அவர் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகி வரும் பராசக்தி படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு வருகிறது.
இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இதில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் பராசக்தி பெயரை பயன்படுத்தக்கூடாது என்ற சர்ச்சை எழுந்தது.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இது அவர் இசையமைக்கும் 100-வது படமாகும்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதில் புதிய முயற்சியை கையாண்டு உள்ளாராம். அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை ரூ.70 கோடியாக உயர்த்தியாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த சூழலில் பராசக்தி படத்திற்கு சம்பளத்திற்கு பதில், படத்தின் லாபத்தில் கணிசமான பங்கு கேட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். அவரின் இந்த முடிவுக்கு தயாரிப்பு நிறுவனமும் ஓ.கே சொல்லிவிட்டதாம். இதன் மூலம் படம் வெளியான பின்னர் படம் வெற்றிகரமாக ஓடும் பட்சத்தில் தனக்கு ரூ.150 கோடி வரை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறாராம்.
பாலிவுட், தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் படத்தின் லாபத்தில் இருந்து சம்பளம் பெற்றுள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, கமல், விஜய், கமல் யாருமே லாபத்தில் பங்கு என்ற முறையில் பணம் பெறவில்லை. இதன் மூலம் ரஜினி, கமல் செய்யாத விஷயத்தை சிவகார்த்திகேயன் செய்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : ஜனநாயகன் படத்தில் விஜய் உடன் லிப்-லாக் காட்சி வைத்த படக்குழு.. பூஜா ஹெக்டே சொன்ன பதில் இதுதான்!