வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட், திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் பலர் நடிக்கும் நிலையில் சிவகார்த்திகேயன், கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள பிஸ்மி, முதலில் இந்த தகவலை நான் நம்பவில்லை ஆனால், இது உண்மை தான். விறுவிறுப்பாக தயாராகி வரும் கோட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
அதில், ஒன்று இளமை கதாபாத்திரம் என்பதால், அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டவுள்ளனர். இதற்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில், ஜோடியாக விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்த மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, அஜ்மல், நிதின் சத்யா, பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. விஜய் பாடிய இந்த பாடல் பெரியளவில் கவனம் ஈர்க்காததால் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சினிமா மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, கோட் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். முதலில் இந்த தகவலை நான் நம்பவில்லை ஆனால், இது உண்மை தான். விஜய் அரசியலுக்கு போகிறார் என்றதும், இணையத்தில் அடுத்த விஜய் யார் என்கிற பேச்சை, சிவகார்த்திகேயனின் இணைய படைகள் சேர்ந்து ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் எப்படி வந்தார் என்பது தான் என்னுடைய கேள்வி. ஒருவேளை சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட்பிரபு இயக்குவதால், அவர் விஜய்யிடம் பேசியிருக்கலாம்.
சிவகார்த்திகேயன் கோட் படத்தில் நடிப்பதால், படத்திற்கு எந்த நன்மையும் இல்லை. கோட் படம் பார்க்க வரும் ரசிகர்கள் விஜய்யின் முகத்திற்காக தான் வருவார்கள். ஆனால், விஜய் என்ன நினைத்து இருப்பார் என்றால், இந்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதன் மூலம், அவரின் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கலாம். இதன் மூலம், 2026 தேர்தலுக்கு வசதியாக இருக்கும் என்று விஜய் ஒரு கணக்கு போட்டு இருப்பார். மற்றபடி விஜய் சிவகார்த்திகேயனை வளரவிட மாட்டார் என்றார். கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்… நடிக்கிறார் என்றால் அவருக்கு பெரிய கதாபாத்திரம் எல்லாம் இருக்காது.
ஏதோ ஒரு காட்சியில் வந்துவிட்டு போவார். இன்றைய காலகட்டத்தில் சினிமா என்பது மாறிவிட்டது, நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை எப்படியாவது திரும்ப எடுத்துவிட வேண்டும் என்ற நிலை உருவாகி இருப்பதால், இத்துப்போன கதையாக இருந்தாலும், அதை பான் இந்தியா என போட்டு வியாபாரத்தை பார்க்கிறார்கள். இதனால், அந்தந்த மொழி நடிகர்களை போட்டு அந்தந்த மொழி ஆடியன்சை படம் பார்க்க வைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : Crime | ரவுடி மனைவியுடன் உல்லாசம்..!! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா..? இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்..!!