fbpx

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்…! உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றி…!

ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பிசைந்து வைத்த கோதுமை மாவு!... பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தாதீர்கள்!… விளைவுகள் ரொம்ப அதிகம்!

Tue Nov 21 , 2023
ரொட்டி செய்த பிறகும், பிசைந்த மாவு எஞ்சியிருக்கும். அந்த மாவை மக்கள் அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்துவார்கள். சில நேரம் திட்டமிட்டே, நேரத்தை மிச்சப்படுத்த, மாவை மொத்தமாக பிசைந்து 2 அல்லது 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பவர்களும் உள்ளனர். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்குமா என நீங்கள் ஆச்சர்யப்படலாம். […]

You May Like