fbpx

இயக்குனர் சங்கர் படத்தில் மீண்டும் நடிக்கின்றார் எஸ்.ஜே.சூர்யா…… வில்லனாக நடிக்கின்றேன் என டுவீட்…

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்ஜே. சூர்யா….. இயக்குனர் சங்கரின் ராம்சரன் நடிக்கும் படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை தொடங்கிவிட்டதாகவும் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்தாகவும் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளேன். அவரின் ரசிகனாகவும் ஒரு நடிகராகவும் நிரைய கற்றுவருகிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜுவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில் தனது அபாரமான நடிப்பு திறமையால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

Next Post

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை...இந்த மாவட்டங்களுக்கு மட்டும் அறிவிப்பு

Mon Sep 12 , 2022
கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்துவருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நாளை இந்த தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கூடலூர் , பந்தலூரில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழையால் பொன்னானி ஆற்றில் […]

You May Like