fbpx

உடம்பில் சாயம்!! வெயிலில் பட்டினியாக பிச்சை எடுக்கும் பிஞ்சு குழந்தை… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…

மனிதர்களுக்கு இதையம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு மனிதர்களின் செயல்கள் மாறிவிட்டது. மனிதர்கள் மிருகம் போல் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் தற்போது நடந்த சம்பவம் ஒன்று கண் கலங்க வைத்துள்ளது.

ஆம், ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல் மாவட்டத்தில், ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது. இதன் அருகே உடல் முழுவதும் சில்வர் நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று பிச்சை எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், அந்த குழந்தை தூங்கி தூங்கி விழுந்தபடி வெயிலில் சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை நேரில் பார்த்த நபர் ஒருவர் அதை வீடியோ எடுத்து, தனது x பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் அமைச்சர் நாரா லோகேஷை டேக் செய்திருந்தார்.

மேலும், அந்த குழந்தையை அடித்து கொடூரமாக துன்புறுத்தி, உணவு கொடுக்காமல் பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் அந்த குழந்தைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் குழந்தை வெயிலில் தூங்கி தூங்கி விழுந்தபடி பரிதாபத்தோடு பிச்சை எடுக்கும் காட்சிகள் காண்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.

Read more: 1 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!!! கள்ளக் காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!!

English Summary

small-baby-was-forced-to-beg

Next Post

"உல்லாசமா இருந்தா போதும், குழந்தை வேண்டாம்"; பெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..

Thu Nov 21 , 2024
woman-threw-away-the-new-born-baby

You May Like