நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று அத்திக்குன்னா பகுதியில் இருக்கின்ற தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் என்ற சிறுவன் அத்திக்குன்னா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார்.
அந்த சிறுவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் இயலாமல் போனது.இதனைத் தொடர்ந்து, மத்திய துணை ராணுவ படை வீரரான ஜேம்ஸ் என்பவர் ஆற்றின் குதித்து நீண்ட தூரம் நீந்தி சென்று அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தார்.
அதன் பிறகு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துரிதமாக செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய ஜேம்சை பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் மேலும் பொதுமக்கள் உள்ளிட்டு வெகுவாக பாராட்டினர் இந்த சம்பவத்தை அடுத்து அத்திக்குன்னா குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது