fbpx

ஒருமாதம் ஆனாலும் சின்ன வெங்காயம் கெட்டுப்போகாது!… எப்படி தெரியுமா?… இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க!

நமது சமையலறையில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை எப்படி கையாளுவது என்பது குறித்த சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

நம் அனைவரது வீட்டிலும் சமையல் அறையே அனைத்து செயல்பாட்டின் மையப் புள்ளியாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சமைக்கவும், நண்பர்கள், குடும்பத்தினருடன் நன்கு பழகவும் உகந்த இடமாக சமையல் அறை உள்ளது. பொதுவாக சமையல் அறையில் நாம் சில விஷயங்களை சிரமப்பட்டு செய்து கொண்டிருப்போம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், சமைக்கு போது இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும். அந்தவகையில், நமது சமையலறையில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை எப்படி கையாளுவது என்பது குறித்த சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும். ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும். பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும்.
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

சின்ன வெங்காயம் வாங்கி வந்த பிறகு வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல், முளை வராமல் இருக்கும். எலுமிச்சம் பழத்தை தினமும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாமலும் வாடாமல் இருக்கும். இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைத்தால் அப்படியே இருக்கும். வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். வெண்டைக்காயின் காம்பையும், தலைபகுதியையும் நறுக்கி வைத்தால் மறுநாள் வரை சமைப்பதற்கு முற்றிப் போகாமல் இருக்கும்.

Kokila

Next Post

பஞ்சாப் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு...! 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவு...!

Wed Apr 26 , 2023
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது. 5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாதலுக்கு அவரது மகனும் சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மற்றும் […]

You May Like