fbpx

சின்னத்திரை டூ வெள்ளித்திரை : சினி உலகில் நுழையும் நடிகைகள்…!

ஸ்டேஜ் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட், சினிமா ஆர்டிஸ்ட் என நடிகர்களை பிரித்துப் பார்த்து வந்த காலம் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நடிகர்கள் என்ற ஒற்றை வட்டத்திற்குள் வந்து விட்டனர் இந்த காலத்து கலைஞர்கள். உதாரணமாக சின்னத்திரையில் பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகைகள் தற்போது சினிமா உலகில் நுழைந்திருக்கின்றனர். அவர்கள் யார் யார்? அவர்கள் நடிக்கும் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…

ரோஷினிஹரிப்பிரியன்: பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். கண்ணம்மா கதாபாத்திரத்திரம் மூலம் பிரபலமானார். பிறகு சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக வந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தற்போது ரோஷினி தன் முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பி இருக்கிறார். ஓடிடி சீரிஸ், படங்கள் என வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் விரைவில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறுகிறார் ரோஷினி.

நடிகை காவ்யா : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக மக்களின் மனதில் இடம்பிடித்த சிறிது காலத்திலேயே அந்த சீரியலை விட்டு விலகினார் காவ்யா. மிரள் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர்,  சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் சிறுவயது கனவு எனவும், மிரள் படம் மூலம் அது சாத்தியமானதாகவும், தற்போது ஓடிடி, இரண்டு படங்களில் கதாநாயகி என அடுத்தடுத்து நான் போய்க் கொண்டிருப்பதாகவும், அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் தாமரை : மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி, மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் பிக் பாஸ், பிக் பாஸ் அல்டிமேட், பிபி ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் தாமரை. பொன்னியின் செல்வன் பட நடிகர் சரத்குமார் நடிக்கும் ஆழி படத்தில் தாமரை கமிட் ஆகி இருக்கிறாராம். அதே போல ரோபோ ஷங்கர் நடிக்கும் படம் ஒன்றிலும், வையாபுரி நடிக்கும் படம் ஒன்றிலும் தாமரை கமிட் ஆகி இருக்கிறார்.

Kokila

Next Post

முகப்பொலிவிற்கு இந்த ஜீஸை தினமும் குடித்து வரலாம்..!

Wed Jan 4 , 2023
முகப்பொலிவிற்கு பலவித கிரீம்கள் பயன்படுத்தினாலும் அதனால் பின்விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் முகப்பொலிவையும் பெறலாம் பக்க விளைவுகள் இல்லாமல்.  முக சிகிச்சையில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும் என்று சில மருத்துவர்கள் நம்பினாலும், மற்றவர்கள் சாத்துக்குடி முகப் பொருட்களைப் பயன்படுத்துவது முகத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள். சிலர் சாத்துக்குடி சாற்றை பானமாகவும், முக சிகிச்சையாகவும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். இது சருமத்தில் […]

You May Like