fbpx

Pre-Installed செயலிகளை நீக்க முடியவில்லையா..? விரைவில் புதிய பாதுகாப்பு விதிகளை கொண்டு உள்ள வர மத்திய அரசு…

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், முன் நிறுவப்பட்ட செயலிகளை (pre-installed apps) அகற்றும் வசதியை வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில், புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது..

ஸ்மார்ட்போன் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது… ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சில செயலிகள் (pre-installed apps) நிறுவப்பட்டிருக்கும்.. நாமே நினைத்தாலும், அந்த செயலிகளை அன் இன்ஸ்டால் செய்ய முடியாது.. இந்த சூழலில், இந்த செயலிகள் மூலம் உளவு பார்ப்பது மற்றும் செயலிகள் மூலம் பயனர் தரவை தவறாகப் பயன்படுத்துவது போன்ற சைபர் குற்றங்கள் நாட்டில் பரவலாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது…

இந்த நிலையில் மத்திய அரசு, ஸ்மார்ட்போன்களுக்கான புதிய பாதுகாப்புச் சட்டத்தை முன்மொழிந்துள்ளது.. அதன்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.. அதாவது, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், முன் நிறுவப்பட்ட செயலிகளை (pre-installed apps) அகற்ற அனுமதி வழங்க வேண்டும்.. மேலும், இயக்க முறைமை (operating system updates) புதுப்பிப்புகளை திரையிடுவதை கட்டாயமாக்க வேண்டும்..

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “முன்-நிறுவப்பட்ட செயலிகள், பலவீனமான பாதுகாப்பு அம்சமாக இருக்கலாம், மேலும் சீனா உட்பட எந்த வெளிநாட்டு நாடுகளும் இதைப் பயன்படுத்துவதில்லை. இது தேசிய பாதுகாப்பின் விஷயம்” என்று தெரிவித்தார்..

ஸ்மார்ட்போன்களுக்கான முன்மொழியப்பட்ட புதிய பாதுகாப்புச் சட்டங்கள் என்ன சொல்கிறது..?

  • புதிய விதிகளின் கீழ், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் நிறுவல் நீக்க விருப்பத்தை வழங்க வேண்டும்.
  • புதிய மாடல்கள் இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் மூலம் இணக்கத்திற்காக சரிபார்க்கப்படும்.
  • “இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்கள் முன்பே நிறுவப்பட்ட செயலிகள் /ப்ளோட்வேர்களைக் கொண்டிருக்கின்றன, இது தீவிர தனியுரிமை/தகவல் பாதுகாப்புச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது
  • இந்த விதி அமலுக்கு வந்தவுடன் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு, ஒரு வருடம் அவகாசம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, அதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை

முன்னதாக பயனர்களின் தரவுகளை தவறாகப் பயன்படுத்துவதால் இ-ஃபார்மசிகளை மூடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..

Maha

Next Post

மாணவர்கள் நலன்...! தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு...!

Wed Mar 15 , 2023
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அணுக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது அறிவிப்பில்; தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும் தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். […]

You May Like