fbpx

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் படைத்த சாதனை!… ரெக்கார்ட்ஸ் லிஸ்ட் இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இதில், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 43 ரன்களில் வெளியேறினார். மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரியாக விளாசவே ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் இந்தியாவிற்கு எதிராக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 2ஆவது நாள் தொடங்கினர். இதில், டிராவிஸ் ஹெட் கூடுதலாக 17 ரன்கள் சேர்த்து 163 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 288 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 6 ரன்களில் வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களும், ஷமி மற்றும் தாக்குர் தலா 2 விக்கெட்களும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஒருபுறம் பவுண்டரி அடித்து தனது 31ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு இங்கிலாந்தில் 7ஆவது சதத்தை அடித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 9 முறை சதம் அடித்த ஜோ ரூட் சாதனையை சமன் செய்துள்ளார். ஓவல் மைதானத்தில் மட்டும் 3 சதங்கள் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் 113 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக அதிகம் சதம் அடித்தவர்கள்: ரிக்கி பாண்டிங் – 41, ஸ்டீவ் வாக் – 32, ஸ்டீவ் ஸ்மித் – 31, மேத்யூ ஹைடன் – 30, சர் டான் பிராட்மேன் – 29 இடங்களை பிடித்துள்ளனர். இதேபோல், இந்தியாவிற்கு எதிராக அதிக சதம் அடித்தவர்கள்: ஜோ ரூட் – 9, ஸ்டீவ் ஸ்மித் – 9, ரிக்கி பாண்டிங் – 8, சர் விவி ரிச்சர்ட்சன் – 8, சர் ஹர்பீல்டு சோபெர்ஸ் – 8 இடங்களை பிடித்துள்ளனர். இந்தப் போட்டியில் சாதனை படைத்த நிலையில், ஷர்துல் தாக்கூர் ஓவரில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

Kokila

Next Post

அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா!... 2ஆம் நாள் முடிவில் 151 ரன்கள், 5 விக்கெட்!

Fri Jun 9 , 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் […]

You May Like