கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உற்சாகமாக கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன் விளையில் கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். அவர் கன்னியாகுமரியில் 4 நாட்களில் 56 கி.மீ. தூரம் கடந்தள்ளார்.
தமிழகத்தில் யாத்திரை நிறைவு பெற்றதை அடுத்து ராகுல்காந்தி கார் மூலம் தமிழகம் – கேரள எல்லைக்கு வந்து கடந்த ஞாயிறு அன்று காலை காரில் புறப்பட்டு பாசாலை பகுதிக்கு சென்று அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கின்றார்.
இதையடுத்து , கேரளாவின் ஆலப்புழா புன்னமடம் பகுதியில் ’’பாம்பு படகு போட்டி’’ நடைபெற்றது இப்போட்டியில் ராகுல்காந்தியும் பங்கேற்று உற்சாகமாக உற்சாகமாக படகு ஓட்டினார்.