கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள பாலூரில் சம்பத் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டிடத்தில் அருகில் நேற்று முன்தினத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றுள்ளது. குட்டிகளை அங்கேயே தனியே விட்டுவிட்டு உணவுகளை தேடி தாய் நாயானது வெளியே சென்றுள்ளது.
இந்த நிலையில் அங்கு ஊர்ந்து வந்த நல்ல பாம்பானது , நாய்க்குட்டிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு அருகே நின்று கொண்டது. இதனை பார்த்த அங்குள்ள மக்கள் பாம்பு, நாய்க்குட்டிகளை கடித்து விடுமோ என்ற பயத்தில் குட்டிகளை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
உடனே நல்ல பாம்பு யாரையும் நாய்க்குட்டிகளுக்கு அருகே வரவிடாமல் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பாம்பை விரட்ட முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பானது படம் எடுத்தபடியே சீறிக் கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் தாய் நாயானது திரும்பி வந்த நிலையில், குட்டிகளின் அருகே பாம்பை கண்டதும் குரைத்தபடி வேகமாக அருகில் சென்றது. அப்போது தான் நாய்க்குட்டிகளை பாம்பு நாய்க்குட்டிகளை பாதுகாத்து கொண்டிருப்பதை புரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர். தகவல் அறிந்து வனஅலுவலர் வந்து, நல்ல பாம்பை நன்முறையில் பிடித்து பாதுகாப்பாக எடுத்து சென்றார்.