fbpx

கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு!!! 7 மணி நேரம் காத்திருந்த பயணிகள்…?

கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தில் பாம்பு இருப்பதால்பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் துபாயிலிருந்து கோழிக்கோடு வரும் விமானம் தாமதமானது.

மேலும் கோழிக்கோடு விமான குறித்து பயணி ஒருவர், “துபாய் விமான நிலையத்தில் 7 மணிநேரம் சிக்கித் தவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த ஏர் இந்தியா, “IX344 துபாய்-கோழிக்கோடு விமானம் 11 டிசம்பர் அதிகாலை 1:45 மணிக்குப் புறப்படும்” என்று தெரிவித்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்த சம்பவம் குறித்து டிசிஜிஏ விசாரிக்க உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kathir

Next Post

என்ன சிம்ரன் இதெல்லாம்..? செல்ஃபி மோகத்தால் மரணம் வரை சென்ற மணப்பெண்..!! ஆபத்தில் முடிந்த போட்டோஷூட்..!!

Sun Dec 11 , 2022
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதெல்லாம் இன்றைய யூத்களுக்கு கவலையில்லை. திருமணத்திற்கு முன்பாக முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்று சொர்க்கத்துக்கு அருகே ப்ரீ போட்டோஷூட் செய்ய முடியுமானால், அது தான் பேரானந்தம் என்கிற ரீதியில் காலம் போய் கொண்டிருக்கிறது. கோவில் தூண்களில் இடுப்பை அசைத்தப்படியே ஆட்டம் போடுவது, இடுப்பளவு நீரில் எவனோ சொல்லிக் கொடுக்க, மனைவி கீழே விழாமல் வளைந்தப்படியே பிடித்துக் கொள்வது என ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்களின் அலப்பறை அதிகமாகி […]
என்ன சிம்ரன் இதெல்லாம்..? செல்ஃபி மோகத்தால் மரணம் வரை சென்ற மணப்பெண்..!! ஆபத்தில் முடிந்த போட்டோஷூட்..!!

You May Like